தமிழ்நாட்டில், இந்த பெயரை சொன்னால் பிறந்த குழந்தைகளுக்குக்கூட தெரிந்து விடும். ஆம், இவருடைய பெயரை உச்சரிக்காத எந்தவொரு நடிகரோ, அரசியல்வாதியோ தமிழ்நாட்டில் இருப்பது மிகவும் அரிது! ஏனென்றால், திரைத்துறையில் நடிகராக இருந்தும் நடிக்க தெரியாத ஒரு நடிகர், அரசியல் துறையில் இருந்தும் அரசியல் செய்ய தெரியாத ஒரு அரசியல்வாதி, மொத்தத்தில், இறைவனால், நம் நாட்டுக்கு அளிக்கப்பட்ட ஒரு மாபெரும் மனிதர்.
இவர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 136 , இவருடைய ஒவ்வொரு படமும் வெறும் படமல்ல அனைத்துமே பாடம், ஏனென்றால், மனிதம் என்றால் என்ன, மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறெல்லாம் வாழக்கூடாது என்பதனை தன் படத்தின் மூலமாக, படிக்காத பாமர மக்களுக்கும் கற்றுக்கொடுப்பார் , ஆதலால், தான் இவரை "வாத்தியார்" எனவும் மக்கள் அழைக்கிறார்கள். இன்றளவும் இவருடைய உண்மையான ரசிகர்கள் எம்ஜிஆர் காட்டிய வழியை பின்பற்றுகிறார்கள்,
அவர் காட்டிய வழி என்னவென்றால்,
1.எந்தவொரு சூழலிலும் புகை பிடிக்காதே,
2.மது குடிக்காதே,
3.முதியவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்,
4.தன்னுடைய மனைவியை தவிர அனைவரும் நம் உடன்பிறவா சகோதரிகள்,
5.இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்துமே நம் சொந்தம்,
6.இறுதி மூச்சு வரை சொந்த உழைப்பில் உண்,
7.எந்த இடமாக இருந்தாலும் பெண்ணுக்கோர் பிரச்சனை என்றால் உயிரை கொடுத்தாவது காப்பாற்று ,
8.மனிதர்கள் செய்யும் அனைத்து தப்புகளையும் இறைவன் பார்க்கின்றான் ,
9.நமக்கு அடுத்த வேலை உணவு இல்லையென்றாலும் பிறருக்கு உதவி செய்வதை நிறுத்திவிடாதே ,
10.நல்லவர்கள் என்றுமே வாழ்வில் கெட்டுப்போகமாட்டார்கள் ,
11.பிறரை ஏமாற்றாதே நீயும் ஏமாறாதே ,
12.தாயே முதல் தெய்வம் ,
13.உடலை பலமாக வைத்துக்கொள் ,
14.எதிரியின் பின்புறத்தில் நின்று திடீரென தாக்காதே ,
15.உன்னை விடவும் பலம் குறைந்தவர்களை அடிக்காதே ,
16.முக்கியமாக தான் காதலித்த பெண்ணாக இருந்தாலும் தன்னை பாதியிலே விட்டுவிட்டு தன்னை விடவும் அதிக வசதி படைத்த ஒரு பையன்னை மணந்து கொண்டாலும், அவளுடன் வாக்குவாதம் செய்யாமல், அவளுக்கு பிடித்தவனுடன் நலமாக வாழட்டும், என்று தன்னுடைய தனி வழியில் சென்று விட வேண்டும், இவ்வாறு அவர் காட்டிய நல்வழிகள் ஏராளம்.